TIRUPUR PHOTOGRAPHY TPA
திருப்பூர் புகைப்படக் கலைஞர்கள் சங்கம்
ABOUT OUR ASSOCIATION

சங்க வரலாறு & நெறிமுறைகள்

பதிவு எண்: 142/2005 (தமிழ்நாடு அரசு பதிவு பெற்றது)

சங்கத்தின் தோற்றம் & பின்னணி

திருப்பூர் மாவட்டத்தில் புகைப்படத் தொழிலில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள், ஸ்டுடியோ உரிமையாளர்கள் மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, தொழில்முறை வழிகாட்டுதல் வழங்குவதற்காக 2005-ஆம் ஆண்டு திருப்பூர் புகைப்படக் கலைஞர்கள் சங்கம் (Tirupur Photography Association - TPA) தொடங்கப்பட்டது.

ஆரம்ப காலத்தில் 30 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட சங்கம், இன்று மாவட்டம் முழுவதும் 450-க்கும் மேற்பட்ட தொழில்முறை புகைப்படக் கலைஞர்களைக் கொண்ட வலிமையான அமைப்பாக உருவெடுத்துள்ளது.

எங்கள் நோக்கம் (Mission)

புகைப்படக் கலைஞர்களின் உழைப்பிற்கான சரியான மதிப்பைப் பெற்றுத் தருதல், நவீன தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குதல்.

எங்கள் பார்வை (Vision)

திருப்பூர் மாவட்டத்தை தமிழகத்தின் மிகச்சிறந்த படைப்பாற்றல் மிக்க புகைப்படக் கலைஞர்களின் மையமாக உயர்த்துவது.

WhatsApp Chat உடனடி உதவி (Help)